×

பொன்னையிலும் பறவைக்காய்ச்சல் பீதி பறவைகள் செத்து மடிவதால் பரபரப்பு ஆற்காட்டை தொடர்ந்து

பொன்னை, ஜன.26: ஆற்காடு அருகே பறவைகள் மர்மமாக இறந்துள்ள நிலையில், பொன்னை அருகேயும் இறந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பறவைக்காய்ச்சல் பீதியில் உள்ளனர். வேலூர் மாவட்டம், பொன்னை அடுத்த கீரைசாத்து ஊராட்சிக்கு உட்பட்ட ஓட்டேரி புத்துக்கோயில் அருகே நேற்று காலை மர்மமான முறையில் ஒரு மைனா, 2 சிட்டுக்குருவிகள் இறந்து கிடப்பதை அப்பகுதி மக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து ஏராளமானோர் அங்கு வந்து பார்த்து சென்றனர். மேலும், தகவலறிந்த பொன்னை போலீஸ் இன்ஸ்பெக்டர் காண்டீபன் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த பறவைகளை பார்வையிட்டார். பின்னர், அவை எப்படி இறந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் பொன்னை கால்நடைத்துறை மருத்துவர் பிருந்தா தலைமையில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர், மைனாவின் உடல் பாகங்களை கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.  ஏற்கனவே ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த விளாப்பாக்கம் நாராயணபுரம் பகுதியில் நேற்றுமுன்தினம் மர்ம மான முறையில் கோழிகள், காகம், மைனா உள்ளிட்டவை இறந்து கிடந்தன. தகவலறிந்த கால்நடை டாக்டர்கள் அங்கு வந்து ஆய்வு நடத்தினர். பின்னர், அவற்றின் உடல் பாகங்களை ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். பறவைகள் மர்மமான முறையில் செத்து மடிவதால் ஆற்காடு, பொன்னை பகுதிகளை சேர்ந்த மக்கள் பறவைக்காய்ச்சல் பரவுவதாக பீதியடைந்துள்ளனர்.

Tags : Ponnai ,
× RELATED கார் கவிழ்ந்து பெங்களூருவை சேர்ந்த 5...