×

100 நாள் வேலை திட்டத்தின் பெயரை மாற்றியதை கண்டித்து தொடர் போராட்டங்களை காங்கிரஸ் நடத்த உள்ளது: செல்வப்பெருந்தகை பேட்டி

 

சென்னை: 100 நாள் வேலை திட்டத்தின் பெயரை மாற்றியதை கண்டித்து தொடர் போராட்டங்களை காங்கிரஸ் நடத்த உள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி அளித்துள்ளார். 100 நாள் வேலை திட்டத்தில் காந்தியின் பெயர் மீண்டும் இடம்பெற வேண்டும் என வலியுறுத்தி ஜனவரி 24ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெறும். தமிழ்நாடு முழுவதும் ஜனவரி 30ம் தேதி உள்ளிருப்பு போராட்டம் நடைபெறும்.

பிப்ரவரியில் தமிழ்நாட்டில் நடக்கும் காங்கிரஸ் போராட்டத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்கிறார். பிப்.14 முதல் 20 வரை மண்டல அளவிலான கோரிக்கை பேரணி நடைபெறும். பிப்.16 முதல் 25 வரை மண்டல அளவிலான கோரிக்கை பேரணி நடைபெறும். பிப்.7 முதல் 15 வரை மாநில அளவில் பெருந்திரள் போராட்டம் நடைபெறும். காங்கிரஸ் கட்சியில் தேர்தல் போர் வீரர்களை உருவாக்கி இருக்கிறோம்.

இந்தியா கூட்டணி வலிமையாக இருக்க வேண்டும் என்று தன்னை சந்தித்து தமிமுன் அன்சாரி வலியுறுத்தினார். அதிகாரப்பகிர்வு தொடர்பாக மாணிக்கம் தாக்கூர் சொன்னது அவருடைய சொந்த கருத்து. திமுக தவிர வேறு யாரிடமும் கூட்டணி பற்றி பேசவில்லை. எந்த கட்சி ஆட்சியில் பங்கு வேண்டாம் என்று கூறும் என்றுதான் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கூறியிருந்தார். காங்கிரஸ் தேசிய தலைமையும் ‘ முதலமைச்சர் ஸ்டாலினும் இணைந்தே முடிவு எடுப்பார்கள்.

எங்கள் கூட்டணிக்கு தேவையானதை நாகரிகமாக கேட்போம், நாகரிகமாக பெறுவோம். மாணிக்கம் தாக்கூருக்கு என்ன தேவை என்பதை கட்சி மேலிடத்தில்தான் சொல்ல வேண்டும். கருத்துரிமை உள்ளது என்பதற்காக பொது வெளியில் அனைத்தையும் பேசக்கூடாது. மாணிக்கம் தாக்கூர் பொதுவெளியில் பேசவேண்டிய அவசியமில்லை. தூய்மை பணியாளர்களின் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என்று முதலமைச்சர், அமைச்சர்களிடம் வலியுறுத்தியுள்ளோம்

 

Tags : Congress ,Chennai ,president ,Tamil Nadu Congress Committee ,Gandhi ,
× RELATED டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்...