×

எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் சிறார் மன்ற கட்டிடம்: கமிஷனர் திறந்து வைத்தார்

திருவொற்றியூர்: எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் சிறார் மன்ற கட்டிடத்தை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் திறந்து வைத்தார். சென்னை வடக்கு மண்டல காவல் சரகத்திற்கு உட்பட்ட 18 இடங்களில் இளஞ்சிறார்கள் கல்வி, விளையாட்டு மற்றும் பொது அறிவு போன்றவைகளில் திறமையை மேம்படுத்திக்கொள்ள தமிழக அரசின் சார்பில் சிறார் மன்ற கட்டிடம் கட்டப்பட்டது. அதன்படி, எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் கட்டப்பட்ட கட்டிடத்தின் திறப்பு விழா நேற்று நடந்தது.

சென்னை வடக்கு மண்டல இணை கமிஷனர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். மாதவரம் காவல் சரக துணை கமிஷனர் பாலகிருஷ்ணன், வண்ணாரப்பேட்டை சரக துணை கமிஷனர் சுப்புலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். பின்னர், காணொலி காட்சி மூலம் மற்ற கட்டிடங்களையும் திறந்து வைத்து, சிறார்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். நிகழ்ச்சியில், உதவி கமிஷனர்கள், ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். உதவி கமிஷனர் ராஜேந்திரன் நன்றி தெரிவித்தார்.

Tags : Children's Hall Building ,Commissioner ,Ernakulam Tsunami Residence ,
× RELATED மதுரை உதவி ஆணையருக்கு விதித்த அபராதம் ரத்து..!!