போலி மதுப்பாட்டில்கள் கடத்திய பெண் கைது

மதுராந்தகம்: அச்சிறுப்பாக்கம் அருகே ஆத்தூர் சுங்கச்சாவடியில் அச்சிறுப்பாக்கம் மதுவிலக்கு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகப்படும் படியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 180 மில்லி கொண்ட 960 மது பாட்டில்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இவை அனைத்தும் போலியாக தயாரிக்கப்பட்டவை என கூறப்படுகிறது. இதனை கடத்தி வந்த செங்கல்பட்டு மேலமையூர் ஜெயந்தி (35) என்ற பெண்ணை மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். பின்னர், அவரை சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories:

>