திருவள்ளூர் ஆர்டிஓ அலுவலகத்தில் உருக்குலைந்து வீணாகும் பறிமுதல் வாகனங்கள்

திருவள்ளூர்: திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக பல்வேறு வழக்கு சம்பந்தமாக லாரிகள், வேன்கள், கார்கள், இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 300க்கும் மேற்பட்ட வாகனங்கள் அலுவலகத்தை சுற்றிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த பறிமுதல் வாகனங்கள் அனைத்தும் முறைப்படி ஆண்டுதோறும் ஏலம் விடப்பட வேண்டும். ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக ஏலம் விடப்படாததால் பறிமுதல் வாகனங்கள் அனைத்தும் மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் உருக்குலைந்து கிடக்கின்றன. இந்த பறிமுதல் வாகனங்களை அருகில் உள்ள மைதானத்தில் நிறுத்தி உள்ளதால், அலுவலகம் வருபவர்கள் தவிக்கின்றனர். இவ்வாறு வாகனங்களை மறைக்கும் அளவு செடி, கொடிகள் வளர்ந்து, புதராக உள்ளதால், அப்பகுதியில் பாம்புகளின் தொல்லை அதிகரித்து உள்ளது. எனவே, பறிமுதல் வாகனங்களை ஏலம் விட்டு, அதன் வருவாயை அரசு கணக்கில் சேர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: