×

1 முதல் 5ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் வெளியீடு: 25ம் தேதிக்குள் கருத்து கூறலாம்

 

சென்னை: மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: பள்ளிக் கல்விக்கான மாநில கல்விக் கொள்கை 2025ன் அடிப்படையில் புதிய கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்டங்களை உருவாக்க பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் உயர்மட்ட வல்லுநர் குழு மற்றும் கலைத்திட்ட வடிவமைப்பு குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்த குழுவினரின் வழிகாட்டுதலின்படி மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் 1 முதல் 5ம் வகுப்புகளின் தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சூழ்நிலையியல், சமூக அறிவியல் பாடங்களுக்கான பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த பாடத்திட்டங்களை கல்வியாளர்கள், பொதுமக்கள், ஆசிரியர்கள் மாணவர்கள் https//:tnschools.gov.in என்ற இணைய தளத்தில் இன்று முதல் பார்க்கலாம். பாடத்திட்டம் தொடர்பாக கருத்துக் கூற விரும்புவோர் மேற்கண்ட இணைய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள இணைய வழிப் படிவம் மூலம், சுயவிவரங்களுடன் தங்களின் கருத்துகளை
25ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

 

Tags : Chennai ,State Educational Research and Training Institute ,Minister ,Anbil Mahesh Poyyamozhi ,
× RELATED கரூர் நெரிசலில் 41 பேர் பலியான இடத்தில்...