×

முட்புதரில் கிடந்த மலைப்பாம்புகள்

திருத்தணி: திருவாலங்காடு ஒன்றியம் சிவாடா கிராமம் அருகே வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் சிவாடா கிராம மக்கள் தங்களது கால்நடைகளை மேய்க்க ஓட்டிச்செல்வர். அந்த வகையில் நேற்று கிராம மக்கள் தங்களது கால்நடைகளை அப்பகுதியில் வனப்பகுதியில் மேய்த்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு முட்புதரில் இரண்டு மலைப்பாம்புகள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து உடனடியாக ஊராட்சி மன்ற தலைவர் முனிகிருஷ்ணனுக்கு தகவல் கொடுத்தனர். அவர் திருத்தணி தீயணைப்பு துறை நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் திருத்தணி தீயணைப்பு நிலைய அலுவலர் அரசு தலைமையில் தீயணைப்பு வீரர்கள் 5 பேர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கிருந்த 10 மற்றும் 15 அடி நீளமுள்ள இரண்டு ராட்சத மலைப்பாம்புகளை சுமார் ஒரு மணிநேரம் போராடி உயிருடன் பிடித்து அவற்றை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் 2 மலைப்பாம்புகளை சென்னை வண்டலூர் பூங்காவிற்கு அனுப்பி வைத்தனர்.

Tags :
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...