×

நிர்வாக காரணங்களால் பிராட்வே பேருந்து நிலையம் தொடர்ந்து செயல்படும்: எம்டிசி அறிவிப்பு

சென்னை: நிர்வாக காரணங்களால் பேருந்து நிலையம் மாற்றம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்படுகிறது. பிராட்வே பேருந்து நிலையம் தொடர்ந்து செயல்படும் என்று மாநகர் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநகர் போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிக்கை: பிராட்வே பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வரும் பேருந்துகள் நாளை முதல் தீவுத்திடல் மற்றும் ராயபுரம் தற்காலிக பேருந்து நிலையங்களிலிருந்து இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. நிர்வாக காரணங்களால் இந்த பேருந்து நிலையம் மாற்றம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்படுகிறது. மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும். பிராட்வே பேருந்து நிலையம் தொடர்ந்து செயல்படும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Broadway ,MTC ,Chennai ,Municipal Transport Corporation ,
× RELATED தமிழ்நாட்டை மையமாக வைத்து கூடுதல்...