ஏரி மண் கடத்தியவர் கைது

ஆரணி, ஜன.24: ஆரணி தாலுகா இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ஆரணி அடுத்த கல்பூண்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக மண் ஏற்றி வந்த லாரியை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில், சூளைக்கு தேவையான மண்ணை அங்குள்ள ஏரியில் இருந்து கடத்தியது தெரியவந்தது. உடனே லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், ஏரி மண் கடத்திய கல்பூண்டி கிராமத்தை சேர்ந்த சந்திரன் மகன் பிரசாந்த்(23) என்பவரை கைது ெசய்தனர். பின்னர், அவரை ஆரணி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், லாரி உரிமையாளர் வெங்கடாசலம் என்பவரை தேடி வருகின்றனர்.

Related Stories:

>