குற்றவாளிகளை பிடிக்க உதவிய மோப்ப நாய் ‘சன்னி’ உயிரிழப்பு கொலை, கொள்ளை வழக்குகளில்

வேலூர், ஜன.24: வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நடந்த கொலை, கொள்ளை வழக்குகளில் குற்றவாளிகளை பிடிக்க உதவிய மோப்ப நாய் சன்னி உயிரிழந்தது. வேலூர் மாவட்ட மோப்ப நாய் பிரிவில் சன்னி, சிம்பா ஆகிய நாய்கள் கொலை, கொள்ளை வழக்கிலும், லூசி, அக்னி நாய்கள் வெடி பொருட்கள் பிரிவில் பணியாற்றி வருகின்றன.இதில் மோப்ப நாய் சன்னி, கடந்த 2015ம் ஆண்டு புதிதாக வேலூர் மாவட்ட மோப்ப நாய் பிரிவில் சேர்க்கப்பட்டு, சென்னையில் 6 மாத பயிற்சிக்கு பின்னர் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நடந்த கொலை, கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய உதவியுள்ளது. குறிப்பாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உமராபாத் காவல் நிலைய எல்லையிலும், மார்ச் மாதம் விருதம்பட்டு காவல் நிலைய எல்லையிலும் நடந்த கொலை வழக்குகளில் குற்றவாளிகளை கைது செய்ய உதவியது. இந்நிலையில் கடந்த 3 மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நாய் சன்னி, நேற்று காலை உயிரிழந்தது. இதையடுத்து, மாவட்ட மோப்ப நாய் பிரிவில் அடக்கம் செய்யப்பட்டது.

Related Stories:

>