அரசு பேருந்து ஓட்டுனர்கள் இடையே தகராறு

உளுந்தூர்பேட்டை, ஜன. 24:  கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையம் பகுதியில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வந்து பயணிகளை ஏற்றிச் செல்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வரும் அரசு போக்குவரத்து கழக பேருந்துகள், பேருந்து நிலையத்திற்கு வரும் போது பேருந்து நிலையத்தின் உள்ளே செல்லாமல், வெளிப்பகுதியிலேயே நின்று பயணிகளை ஏற்றிச் செல்கின்றனர். பல அரசு பேருந்துகள் போக்குவரத்திற்கு இடையூறாக தாறுமாறாக நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்வதால் அடிக்கடி அரசு பேருந்து ஓட்டுனர்கள் இடையே தகராறு ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று காலை இதேபோல் ஏற்பட்ட தகராறில் பேருந்து நிலையம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து காவல்நிலைய போலீசார் பேருந்துகளை உடனடியாக அனுப்பி வைத்து போக்குவரத்தை சரி செய்தனர். தொடர்ந்து இது போன்று நடைபெற்று வரும் பிரச்னைகளை தடுக்க வெளியூரில் இருந்து வரும் அனைத்து அரசு பேருந்துகளும் பேருந்து நிலையத்தின் உள்ளே சென்று வருவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories:

>