சென்னை: அறிவுக்கு முக்கியத்துவம் தருகிறது திராவிட இயக்கம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கல்லூரி மாணவர்களுக்கு 10 லட்சம் இலவச மடிக்கணினி வழங்கும் தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; மாணவர்களை பார்த்தவுடன் எனக்குள் புது Vibe வந்துவிட்டது. உலகம் உங்கள் கையில் என்பது வெறும் தலைப்பு அல்ல; அதுதான் உண்மை. மாணவர்களை வளர்த்தெடுத்தால்தான் மாநிலம் வளரும். மாணவர்களை வளர்க்கும் வகையில் நான் முதல்வன் உள்ளிட்ட திட்டங்களை கொண்டு வந்துள்ளோம்.
புத்தாண்டை புத்துணர்வுமிக்க மாணவர்களிடையே தொடங்குவது பாசிட்டிவ் எனர்ஜியை அளிக்கிறது. ஒட்டுமொத்த உலகத்தையும் மாணவர்களின் கையில் கொடுக்கவே மடிக்கணினி வழங்கியுள்ளோம். கடந்தகால பெருமைகளை பேசுவதோடு எதிர்கால பெருமைகளுக்காக உழைப்போம். ஒருபோதும் போலி பெருமைகளை பேச மாட்டோம். மாணவர்களுக்கு காலம் கொடுத்துள்ள இரண்டாவது நெருப்புதான் ஏ.ஐ.அனைவரையும் வாழ வைக்க வேண்டும் என்பதுதான் எனது எண்ணம். மாணவர்களின் கையில்தான் எதிர்காலம் உள்ளது.
மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவது செலவு திட்டம் கிடையாது; எதிர்கால கல்விக்கான முதலீடு. செயற்கை நுண்ணறிவு ஒருபோதும் மனிதர்களுக்கு மாற்றாகாது. மடிக்கணினியை கேம்ஸ் விளையாட பயன்படுத்த போகிறீர்களா? பயனுள்ளதற்கு பயன்படுத்த போகிறீர்களா? நீங்கள் தேர்ந்தெடுப்பது எந்த துறையாக இருந்தாலும், அதில் நீங்கள் உச்சத்தில் இருக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவு ஒருபோதும் மனிதர்களுக்கு மாற்றாகாது என்று கூறினார்.
