தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக மாணவரணி ஆலோசனை கூட்டம்

தூத்துக்குடி, ஜன.24: தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்எல்ஏ  அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட மாணவரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் டூவிபுரத்தில் உள்ள அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் விக்னேஷ் தலைமை வகித்தார். மாவட்ட மாணவரணி தலைவர் சிவரத்தினம், வைகுண்டம் ஒன்றிய மாணவரணி செயலாளர்கள் விஜயன், சிவகளை சேகர் முன்னிலை வகித்தனர்.

இதில் வரும் 25ம்தேதி மாணவரணி சார்பாக வீரவணக்கநாள் கூட்டத்தை சிறப்பாக நடத்துவது குறித்தும், சட்டமன்ற பொதுத்தேர்தல் பணி குறித்தும், அரசின் சாதனை விளக்க துண்டுப் பிரசுரம் வழங்கி பொதுமக்களிடம் ஆதரவு திரட்டுவது குறித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாவட்ட மாணவரணி பொருளாளர் முத்துக்குமார், பகுதி மாணவரணி செயலாளர் இளையராஜா, மணிகண்டன், கிளாட்வின், ரியாஸ், பெரின், நகர மாணவரணி செயலாளர் நாசரேத் அர்ஜூன், தென்திருப்பேரை சாமிதுரை, பகுதி இளைஞர் பாசறை செயலாளர் சாம்ராஜ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் சகாயராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories:

>