×

மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி இலவச மருத்துவ முகாம், ரத்ததானம்-கண்தானம்

திருப்பூர், ஜன.24: திருப்பூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் முன்னாள் அமைச்சரும், தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினரும், கிழக்கு மாவட்ட ெபாறுப்பாளருமான மு.பெ. சாமிநாதன் தலைமையில் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் முன்னிலையில் நடந்தது. வடக்கு மாவட்ட பொறுப்பாளர் இல.பத்மநாபன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். திருப்பூர் கிழக்கு மாவட்டக் கழகத்திற்குட்பட்ட மாநில, மாவட்டக் கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், ஒன்றிய, நகர பொறுப்புக் குழு உறுப்பினர்கள், மாவட்டக் கழக பிரதிநிதிகள் மற்றும் மாவட்டக் கழக சார்பு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், சிறப்பு அழைப்பாளர்களாக உள்ளாட்சி பிரதிநிதிகள், பூத் கமிட்டி ஒன்றிய, நகர கண்காணிப்பாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

திருப்பூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. ஒன்றிய, நகர, பேரூர்களில் நடைபெற்ற மக்கள் கிராம சபை கூட்டத்தை வெற்றியடைய செய்த நிர்வாகிகள், ஆதரவு தெரிவித்த பொதுமக்களுக்கு நன்றி. முதல்வர்    பழனிசாமி    உள்ளிட்ட அமைச்சர்களின்  மீதான  ஊழல்  புகார்கள் மீதும்  விசாரணை  நடத்தி உரிய தண்டனை  பெற்றுத்  தர  வேண்டும் என்று மாவட்ட செயலாளர்களின்  கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை வலியுறுத்துவது. பொள்ளாச்சி  பாலியல்  வழக்கில்  முக்கியக்  குற்றவாளிகளை,  உடனடியாக சி.பி.ஐ.  கைது  செய்ய  வேண்டும். பாதிக்கப்பட்ட  பெண்களுக்கு  நீதி  நிலைநாட்டப்பட வேண்டும். தமிழகத்தில் பெண்களின்    பாதுகாப்பினை    உறுதி செய்திடவேண்டும்  என்று மாவட்டக் கழக செயலாளர்களின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தையும், மூன்று  வேளாண் சட்டங்களையும்  பா.ஜ. அரசு  திரும்பப்பெற   வேண்டும்   என்ற தீர்மானத்தையும், காலதாமதம் செய்யாமல்,  பேரறிவாளன்  உள்ளிட்ட  ஏழு பேரையும்  உடனடியாக  விடுதலை  செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தமிழக ஆளுநரை கேட்ட தீர்மானத்தையும் திருப்பூர் கிழக்கு மாவட்டக் கழக செயல்வீரர்கள் கூட்டம் வழிமொழிகிறது.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை திருப்பூர் கிழக்கு மாவட்ட கழகத்திற்குட்பட்ட கழகத்தின் அனைத்து நிர்வாகிகளும், கழக தோழர்களும் ஒன்றிணைந்து மார்ச் மாதம் முழுவதும் ஆங்காங்கே மக்கள் பயன்பெறும் வகையில் இலவச மருத்துவ முகாம் நடத்துவதோடு, ரத்ததானம் மற்றும் கண்தானம் செய்தும், முதியோர், ஆதரவற்றோர் குழந்தைககள், மாற்றுத்திறனாளிகளுக்கு உணவுகள் வழங்கியும், பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள், எழுது பொருட்கள் வழங்கியும் கொண்டாடுவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : camp ,MK Stalin ,
× RELATED திருவாரூர் முத்துப்பேட்டை இலவச...