- எனது வாக்காளர் பதிவு
- பூத்
- பச்சபெருமாள்பட்டி
- துறையூர்
- சட்டமன்ற உறுப்பினர்
- ஸ்டாலின் குமார்
- எனது வாக்காளர் பதிவுச் சாவடி
- Uppiliyapuram
- உப்பிலியாபுரம் யூனியன்
- துரையூர் சட்டமன்றத் தொகுதி
- திருச்சி மாவட்டம்
- பச்ச பெருமாள் பட்டி...
துறையூர், ஜன. 5: உப்பிலியாபுரம் அடுத்த பச்சபெருமாள்பட்டியில் என் வாக்குச் சாவடி வெற்றி வாக்குச் சாவடி பரப்புரையில் எம்எல்ஏ ஸ்டாலின் குமார் கலந்து கொண்டு பேசினார். திருச்சி மாவட்டம், துறையூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உப்பிலியபுரம் ஒன்றியம் பச்ச பெருமாள் பட்டி கிராமத்தில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பரப்புரை கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு உப்பிலியபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர் அசோகன் தலைமை வைத்தார்.
துறையூர் எம்எல்ஏ ஸ்டாலின் குமார் கலந்து கொண்டு அரசு ஊராட்சிப் பகுதிகளில் நிறைவேற்றப்பட்ட நலத்திட்ட உதவிகள் குறித்து கட்சி நிர்வாகிகள் அனைத்தும் மக்களிடம் எடுத்துக் கூறி அதிக வாக்கு வித்தியாசத்தில் திமுகவை வெற்றி பெற செய்ய உழை க்க வேண்டும் என்றார்.
இதில் பிஎல்ஏ, பிடிஏ, பிஎல்சி ஆகியோருக்கான ஆலோசனை வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் உப்பிலியாபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் முத்துச்செல்வன், மாநில செயற்குழு உறுப்பினர் தமிழ்மாறன், எரகுடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாலசுப்பிரமணியன் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
