திருச்சி, ஜன. 5: ஸ்ரீரங்கம் பகுதியில் புகையிலை விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் ஜன.3 போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஸ்ரீரங்கம் வீரேஸ்வரம் பகுதியிலுள்ள மளிகை கடையில் புகையிலை விற்றது தெரிய வந்தது.இதனையடுத்து ஸ்ரீரங்கம் வீரேஸ்வரம் தெற்கு தெருவை சேர்ந்த கோபிநாத் (28) என்பவரை கைது செய்து, விற்பனைக்காக வைத்திருந்த 618 கிராம் புகையிலையை பறிமுதல் செய்தனர்.
இதேபோல பாலக்கரை ஆழம்தெரு அருகே புகையிலை விற்ற புதுக்கோட்டை மாவட்டம் பல்லவரம்பட்டி பகுதியை சேர்ந்த வினோத் (19) என்பவரை கைது செய்து, அவரிடம் வந்த 100 கிராம் புகையிலையை பாலக்கரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
