சசிகலா பூரண நலம் பெற வேண்டி ஆஞ்சநேயர் கோயிலில் அமமுகவினர் பிரார்த்தனை

தாராபுரம் ஜன.24: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் சசிகலா பூரண உடல் நலம் பெற வேண்டியும், கட்சியின் தலைமைப் பொறுப்பை விரைந்து ஏற்க வேண்டும் என்றும் வேண்டியும் தாராபுரம் காடு அனுமந்தராய சுவாமி கோயில் மருத்துவ ஆஞ்சநேயருக்கு விசேஷ பூஜைகள் செய்து சிறப்பு பிரார்த்தனை செய்தனர். மாவட்ட மகளிரணி செயலாளர் கலாராணி தலைமையில் நகர செயலாளர் வாரணவாசி, பொதுக்குழு உறுப்பினர் அப்பு சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் பேரூர் கழகச் செயலாளர் கந்தசாமி, கான பிரியா, மாவட்ட இளைஞரணி செயலாளர் செல்லத்துரை குளத்துப்பாளையம் பேரூர் செயலாளர் சக்திவேல்,

மாவட்ட சிறுபான்மை அணி ஷேக் பரீத், செல்வராஜ், பெரியசாமி, மாரிமுத்து, பரக்கத் நிஷா, நாகராஜ், கனிமொழி உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>