×

உயர்மின் கோபுரங்களால் பாதிப்பு விவசாயிகள் 4வது நாளாக தொடர் போராட்டம்

காங்கயம்,ஜன.24:விளைநிலங்களின் மீது அமைக்கப்படும் உயர்மின் கோபுரங்களால்  விவசாயம் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட காங்கேயம் அருகே உள்ள படியூர் பகுதி விவசாயிகள் 4வது நாளாக நேற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் விருதுநகர் முதல் திருப்பூர்  மாவட்டம் காவுத்தம்பாளையம் வரையிலான திட்டத்தை சாலையோரமாக புதைவடகம்பியாக அமைக்க நடிக்கை எடுக்க வேண்டும். முடிவடையும் நிலையில் உள்ள திட்டங்களுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும்  நிலத்திற்கு ஒவ்வொருமுறையில் இழப்பீடு நிர்ணயம் செய்யப்படுகிறது. இதனால் அவர்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். அரசாணை எண் 54 அனைத்து மாவட்டங்களுக்கும் அமல்படுத்த வேண்டும். அனைவருக்கும் மாத வாடகை நிர்ணயம் செய்து வழங்க வேண்டும்.

குறைந்தபட்ச இழப்பீடாக தற்போது 50 ஆயிரம் ரூபாய் அறிவித்துள்ளதை உயர்த்தி 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். அறவழியில் போராடிய விவசாயிகள் மீது 38 வழக்குகளை போட்டு உள்ள தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ரத்தத்தில் எழுதி போராட்டத்தில் ஈடுபட்டனர். காத்திருப்பு போராட்டத்திற்கு திமுக முன்னாள் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு பேசினார். இதில் வழக்கறிஞர் ஈசன், பெண்கள் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED காங்கயம் அருகே சாலையோரம் புதரில் திடீர் தீ