×

பராமரிப்பு பணிக்காக தாவரவியல் பூங்கா புல் மைதானம் மூடல்

ஊட்டி,  ஜன. 24:  பராமரிப்பு பணி காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்கா சிறிய புல்  மைதானத்திற்குள் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கோடை  சீசன் நெருங்கிய நிலையில், அனைத்து பூங்காக்களையும் தயார் செய்யும் பணியில்  தோட்டக்கலைத்துறையினர் மும்முரம் காட்டி வருகின்றனர். குறிப்பாக, ஊட்டி  தாவரவியல் பூங்காவில் நாற்று நடவு, புல் மைதானம் சீரமைப்பு, குளங்கள்  சீரமைப்பு போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில், இம்மாதம்  துவக்கம் முதல் கடந்த வாரம் வரை ஊட்டியில் எந்நேரமும் சாரல் மழை பெய்து  வந்தது. இதனால், பூங்காவில் உள்ள புல் மைதானங்கள் அனைத்தும் பழுதடைந்தன.  பூங்காவில் உள்ள பெரிய புல் மைதானம், சிறிய புல் மைதானம் மற்றும் பெர்னஸ்  மைதானம் அனைத்தும் சேறும் சகதியுமாக மாறியது.

இருப்பினும் சுற்றுலா  பயணிகள் இந்த மைதானங்களில் வலம் வந்த நிலையில், புல் மைதானங்கள்  பழுதடைந்தது. இதனால், முதற்கட்டமாக சிறிய புல் மைதானம் பராமரிக்கும் பணி  துவக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த புல் ைமதானத்திற்குள் சுற்றுலா பயணிகள்  செல்ல தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறிய புல் மைதானம்  சீரமைக்கும் பணிகள் முடிந்தவுடன் பெரிய புல் மைதானம் மூடப்பட்டு  சீரமைக்கும் பணிகள் துவக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Closure ,Botanical Garden Grass Ground ,
× RELATED மண்டல காலம் நிறைவு சபரிமலை கோயில் நடை...