மாவட்ட காங். தலைவரை கவுரவப்படுத்திய ராகுல்

கோவை, ஜன. 24: அகில இந்திய காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கோவை சின்னியம்பாளையத்தில் திறந்த காரில் நின்றுகொண்டு பிரசாரம் செய்தார். அங்கு திரண்டிருந்த மக்கள் கூட்டத்தை பார்த்து வியந்துபோனார். இப்பகுதி காங்கிரஸ் மாவட்ட தலைவர் யார்? என விசாரித்தார். ராகுல்காந்தி அருகே நின்றுகொண்டிருந்த காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, சற்று தொலைவில் நின்றுகொண்டிருந்த, கோவை வடக்கு மாவட்ட தலைவர் வி.எம்.சி.மனோகரனை நோக்கி, அவர்தான் மாவட்ட தலைவர் என கூறினார். இதையடுத்து, ராகுல்காந்தி, வி.எம்.சி.மனோகரனை தனது காருக்கு வரும்படி அழைத்தார். காரில் நின்றுகொண்டு பேசுவதற்கு ராகுல் மற்றும் கே.எஸ்.அழகிரிக்கு மட்டும்தான் இடம் இருந்தது. ஆனாலும், வி.எம்.சி.மனோகரனை அருகில் வரும்படி ராகுல் அழைத்தார்.

அவரை கார் மீது அமர வைத்து, இதுபோன்று சிறப்பாக செயல்படும் மாவட்ட தலைவர்களை காங்கிரஸ் கட்சி ஒருபோதும் கைவிடாது என்று பாராட்டி பேசினார். பிரசார நிகழ்ச்சியில், காங்கிரஸ் கட்சியின் மாநில செயல்தலைவர்கள் மயூரா ஜெயக்குமார், மோகன்குமார மங்கலம், கோவை மாநகர் மாவட்ட தலைவர் வக்கீல் கருப்புசாமி, முன்னாள் மேயர் காலனி வெங்கடாசலம், முன்னாள் எம்.எல்.ஏ. எம்.என்.கந்தசாமி, நிர்வாகிகள் வீனஸ் மணி, கணபதி சிவக்குமார், சரவணகுமார், இன்ஜினீயர் ராதாகிருஷ்ணன், அழகுஜெயபால், மகேஷ்குமார், பச்சைமுத்து, சவுந்தரகுமார், உமாபதி, கிருஷ்ணமூர்த்தி, குருசாமி, தமிழ்செல்வன், ராம்கி, சாய்ஸ் சாதிக், குமரேசன், காந்தகுமார், கேபிள் வினோத், பாசமலர் சண்முகம், கணேசமூர்த்தி, பழையூர் செல்வராஜ், விஜயகுமார், கே.பி.எஸ்.மணி, கே.எல்.மணி, சின்னராஜ், மீனாஹரி ராமலிங்கம், ரங்கராஜ், கோவிந்தராஜ், ஜெகநாதன், நவீன்குமார், சொக்கம்புதூர் கனகராஜ், சுண்டக்காமுத்தூர் முருகேசன், செல்வமணி முருகேசன், சுகுணாபுரம் ஆனந்த, கிருஷ்ணராஜன், பாஸ்கர், கோவை போஸ், செல்வபுரம் ஆனந்த், அயூப்கான், ரங்கசாமி, தீரன் கந்தசாமி, துரைமணி, ஜெயக்குமார் சவுந்தர்ராஜ், ஆகாஷ், சுடர்விழி, விஷ்ணு, தண்டபாணி, பாலசுப்பிரமணி, மணி சுந்தரம், குளத்தூர் மணி, சின்னியம்பாளையம் பாலு, கராத்தே ராமசாமி, ராயல் மணி, சிவக்குமார், பேரூர் மயில், தங்கமணி, ராஜந்திரன், சத்தியநாராயணன்,  ஈசா வெங்கடாசலமூர்த்தி, கணபதி அசோக், சகாயராஜ், சக்தி சதீஷ், திலகவதி, காமராஜ்துல்லா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories:

>