பெருந்துறை தொகுதியில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

ஈரோடு, ஜன. 24: பெருந்துறை  சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காஞ்சிக்கோவில் பேரூராட்சி சின்னியம்பாளையம்  புதூர், பள்ளபாளையம் பேரூராட்சி, கவுண்டம்பாளையம் ஆகிய இடங்களில் தமிழ்நாடு  நுகர்பொருளர் வாணிப கழகம் மூலம் நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு விழா  நடந்தது. விழாவிற்கு நுகர் பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் பானுமதி  தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சரும், பெருந்துறை எம்.எல்.ஏ.வுமான  தோப்பு வெங்கடாச்சலம் கலந்து கொண்டு நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து  வைத்து சிறப்புரையாற்றினார். விழாவில் ஊராட்சி ஒன்றிய தலைவர் சாந்தி  ஜெயராஜ், பேரூர் செயலாளர்கள் கமலக்கண்ணன், சீதப்பன், பேரூராட்சி முன்னாள்  தலைவர்கள் அமுல்ராஜ், சிவசுப்பிரமணி, பரமசிவம் உள்ளிட்ட பலர் கலந்து  கொண்டனர். பெருந்துறை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், ரூ.12  லட்சம் மதிப்பில் புள்ளியியல் துறை அலுவலக கட்டிடம் கட்டுவதற்கான பூமிபூஜை  நடந்தது. விழாவில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம்  பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

Related Stories:

>