அண்ணா ஸ்டேடியத்தில் குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை

நாகர்கோவில், ஜன.24 : குடியரசு தின விழாவுக்காக நாகர்கோவில் அண்ணா ஸ்டேடியத்தில் நேற்று காலை சீரமைப்பு பணிகள் நடைபெற்றன. நாட்டின் 72 வது குடியரசு தின விழா நாளை மறுதினம் (26ம்தேதி) கொண்டாடப்படுகிறது. குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில், நாகர்கோவில் அண்ணா ஸ்டேடியத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன. கலெக்டர் அரவிந்த் தேசிய ெகாடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார். இந்த நிகழ்ச்சியில் எஸ்.பி. பத்ரி நாராயணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் போதிய சமூக இடைவெளிகளுடன் விழாவை கொண்டாட ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கலெக்டர் அரவிந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.

குடியரசு தின விழாவுக்கான அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நேற்று காலை அண்ணா ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் 150 ஆயுதப்படை போலீசார் கலந்து கொண்டனர். மேலும் விழாவுக்காக அண்ணா ஸ்ேடடியம் சீரமைப்பு பணியும் தொடங்கியது. ஆயுதப்படை போலீசார் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் இணைந்து மைதானத்தை சீரமைத்து வருகிறார்கள். மைதானத்தில் உள்ள புற்கள், இயந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டன.கொரோனா தொற்று காரணமாக, இந்த ஆண்டு கலை நிகழ்ச்சிகள் இருக்காது என  அறிவிக்கப்பட்டுள்ளது. தியாகிகளை அவர்களின் இல்லங்களுக்கு நேரடியாக சென்று கவுரவிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவுரை வழங்கி உள்ளது.

Related Stories:

>