கிருஷ்ணன்கோவில் சந்திப்பில் 7 வது முறையாக மேன்ஹோல் உடைப்பு

நாகர்கோவில், ஜன.24: நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் போலீஸ் நிலைய ரோட்டில் உள்ள பாலத்து அம்மன் கோயில் அருகில் குடிநீர் மேன்ஹோல் உள்ளது. அடிக்கடி இதில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்வது வாடிக்கையாகி இருக்கிறது. கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக உடைப்பு ஏற்படுவதும், பின்னர் ஊழியர்கள் வந்து சரி செய்வதும் தொடர் கதையாகவே உள்ளது. இந்த நிலையில் தற்போது 7 வது முறையாக இந்த மேன்ஹோல் உடைந்து, தண்ணீர் வீணாக செல்கிறது. இந்த வழியாக தினமும் ஏராளமானவர்கள் சென்று வருகிறார்கள். சாலையில் தண்ணீர் வீணாக செல்வது பொதுமக்களை கவலை அடைய செய்துள்ளது. எனவே உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில் நிரந்தர தீர்வு காண வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>