மக்கள் குறை தீர்ப்பு முகாம்

சாத்தூர். ஜன.24: சாத்தூரில் காவல்துறை சார்பில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. விருதுநகர் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு துணை கண்காணிப்பாளர் ராஜா தலைமையில், சாத்தூர் நகர காவல் ஆய்வாளர் செல்வம், இருக்கன்குடி காவல் ஆய்வாளர் செல்லப்பாண்டி, வெம்பக்கோட்டை காவல் ஆய்வாளர் பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அண்டை வீட்டாருடன் பிரச்னை, குடும்ப பிரச்னைகளுக்கு சுமூகமான பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாணும் களமாக இம்முகாம் அமைந்தது. சிறு பிரச்னைகளுக்கு காவல்நிலையம், நீதிமன்றம் செல்ல தயங்கும் மக்களுக்கான  தீர்வு காணும் இடமாக இந்த மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இந்த மக்கள் குறைதீர்ப்பு முகாம் வாரந்தோறும் சனிக்கிழமை அன்று நடைபெறுவதாக  காவல்துறையினர் தெரிவித்தனர்.

Related Stories:

>