சாத்தூரில் நேதாஜி பிறந்தநாள் விழா

சாத்தூர்,ஜன.24; சாத்தூரில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் சார்பாக  நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 125வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. சாத்தூர் முக்குராந்தலில் நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் 125வது பிறந்த நாளை முன்னிட்டு அகில இந்திய பார்வர்ட் பிளாக் சார்பாக அவரது திருவுருவ படத்திற்கு மாவட்ட தலைவர் பசுபதித்தேவர் மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினார். சாத்தூர் நகர செயலாளர் மகேஷ்வரன், ஒன்றிய செயலாளர் கண்ணன் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். நிகழ்ச்சியில் நகர பொதுச்செயலாளர் பரமசிவம், ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் சங்கிலிப்பாண்டி மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக சாத்தூர் அருகே பெரியகொல்லபட்டி கிராமத்தில் நேதாஜி பிறந்த நாள் விழா  நகர தலைவர் அய்யப்பன் தலைமையில் நடைபெற்றது.

Related Stories:

>