வத்திராயிருப்பில் கட்டப்பட்ட காவலர் குடியிருப்புகளை முதல்வர் திறந்து வைத்தார்

வத்திராயிருப்பு, ஜன. 24: வத்திராயிருப்பில் ரூ.6 கோடியே 79 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள காவலர் குடியிருப்பை காணொளி மூலம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் திறந்து வைத்தார். வத்திராயிருப்பில் இன்ஸ்பெக்டர், 3 எஸ்ஐக்கள் மற்றும் 46 காவலர், தலைமை காவலருக்கான குடியிருப்புகள் ரூ.6 கோடியே 79 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ளன. இதனை முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். வத்திராயிருப்பு குடியிருப்பில்  எம்எல்ஏ சந்திரபிரபா முத்தையா, எஸ்பி பெருமாள் ஆகியோர் குத்து விளக்கேற்றினர். வத்திராயிருப்பு ஒன்றிய தலைவர் சிந்துமுருகன், டிஎஸ்பி நமச்சிவாயம், இன்ஸ்பெக்டர் சுபகுமார், எஸ்ஐ செல்லபாண்டியன், அதிமுக ஒன்றிய செயலாளர்கள் சுப்புராஜ், சேதுவர்மன், முன்னாள் பேரூராட்சி தலைவர் பேச்சியம்மாள்,  பேரூர் செயலாளர்கள் வைகுண்டமூர்த்தி, ஜெயகிரி கலந்து கொண்டனர்.

Related Stories:

>