தேனியில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு விருது

தேனி. ஜன. 24: தேனி மாவட்ட மக்கள் மன்றம் கூட்டமைப்பு, தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு சார்பில் நேதாஜி பிறந்தநாளையொட்டி முன்னாள் ராணுவத்தினருக்கு விருது வழங்கும் விழா நேற்று தேனியில் நடந்தது. கூட்டமைப்பு தலைவர்கள் வக்கீல் முத்துராமலிங்கம் தலைமை வகிக்க, ராஜன் முன்னிலை வகித்தார். கவிஞர் பாரதி, ராணுவ வீரர்கள் நலச்சங்க நிர்வாகிகள் பாண்டி, சின்னசாமி, ,சர்ச்சில் துரை, வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் செல்வகுமார் கலந்து கொண்டு பேசினர். விழாவில் 75க்கும் மேற்பட்ட முன்னாள் ராணுவ வீரர்களுக்கு பாராட்டு சான்றிதழ், விருதுகள் வழங்கப்பட்டது இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>