×

சின்னமனூரில் திறந்தவெளி கழிப்பிடமான பயணிகள் நிழற்குடைகள் நடவடிக்கை எடுக்குமா நகராட்சி?


சின்னமனூர், ஜன. 24: சின்னமனூரில் பயணிகள் நிழற்குடைகளில் மின்விளக்கு இல்லாததால் திறந்தவெளி கழிப்பிடமாக மாறி வருகிறது. சின்னமனூர் மார்க்கையன்கோட்டை ரவுண்டானா பிரிவில் போடி, தேனி பகுதிக்கும் செல்லும் பயணிகள் வசதிக்காக கடந்த 2009ம் ஆண்டு ரோட்டரி சங்கத்தின் சார்பில் பயணிகள் நிழற்குடைகள் கட்டி தரப்பட்டது. இதனை பராமரிக்கும் பணியை சின்னமனூர் நகராட்சி நிர்வாகத்தினர் மேற்கொண்டு வந்தனர். ஆரம்பத்தில் முறையாக பராமரித்து வந்த நகராட்சி அதன்பின் நிழற்குடைகளை கண்டுகொள்ளவில்லை. இதனால் இந்த 2 நிழற்குடைகளையும் இரவுநேரங்களில் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதால் பயணிகள் உள்ளே செல்வதை தவிர்த்து வெளியே கால்கடுக்க பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். இப்பகுதி மக்கள் கூறுகையில், ‘2 நிழற்குடைகளிலும் மின்விளக்கு வசதி செய்து தரவில்லை. இரவுநேரங்களில் இவை இருட்டாக இருப்பதால் கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். எனவே நிழற்குடைகளில் உடனே நகராட்சி நிர்வாகத்தினர் மின்விளக்குகள் பொருத்துவதுடன், தொடர்ந்து முறையாக பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : municipality ,Chinnamanur ,
× RELATED புகழூர் நகராட்சி பகுதியில் காவிரி குடிநீர் தட்டுப்பாடு இல்லை