×

வெனிசுலா நாட்டின் மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கு ரஷ்யா, கியூபா, ஈரான் கண்டனம்..!!

வெனிசுலா: வெனிசுலா மீதான அமெரிக்காவின் வான்வழித் தாக்குதலுக்கு ரஷ்யா கண்டனம் தெரிவித்துள்ளது. வெனிசுலாவுக்கு எதிரான அமெரிக்காவின் ஆயுதமேந்திய ஆக்கிரமிப்பு என ரஷ்ய வெளியுறவுத் துறை கண்டனம் தெரிவித்தது. வெனிசுலா நாட்டின் மீதான அமெரிக்கா தாக்குதலுக்கு ஈரான், கியூபா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை வெளிப்படையாக அமெரிக்கா மீறியுள்ளது.சர்வதேச சட்டங்களை மீறி வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது எனவும் ஈரான் கண்டனம் தெரிவித்தது.


Tags : Russia ,Cuba ,Iran ,US ,Venezuela ,Russian Foreign Ministry ,America ,
× RELATED கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள்...