கிரிக்கெட் போட்டியில் பாப்பாம்மாள்புரம் அணிக்கு முதல் பரிசு

ஆண்டிபட்டி, ஜன.24: ஆண்டிபட்டி அருகே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் பாப்பம்மாள்புரம் அணி முதல் பரிசை வென்றது. ஆண்டிபட்டி அருகே உள்ள எம்.சுப்புலாபுரம் கிராமத்தில் இளைஞர்கள் சார்பில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் தேனி மற்றும் மதுரை மாவட்டத்தை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளிலிருந்து ஏராளமான அணியினர் கலந்து கொண்டனர். கடந்த 3ம் தேதி துவங்கிய இந்த போட்டி நேற்று இறுதி போட்டி நடைபெற்றது. இதில் ஆண்டிப்பட்டி நகரிலுள்ள பாப்பம்மாள்புரம் அணி முதல் பரிசையும், எம்.சுப்புலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த அணி இரண்டாம் பரிசையும், வீரபாண்டி கிராமத்தை சேர்ந்த அணி மூன்றாம் பரிசையும் வென்றன. இதில் வெற்றி பெற்ற அணியினருக்கு ஆண்டிபட்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் முதல் பரிசான 10 ஆயிரம் ரூபாய் மற்றும் வெற்றி கோப்பையை வழங்கினார். மேலும் இரண்டாம் பரிசுக்கான 7 ஆயிரம் ரூபாய் மற்றும் வெற்றி கோப்பை, மூன்றாம் பரிசுக்கான 5 ஆயிரம் ரூபாய், வெற்றி கோப்பையும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் திமுகவைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>