×

ேநதாஜிக்கு மரியாதை

ஆண்டிபட்டி, ஜன. 24: ஆண்டிபட்டி பஸ்நிலையம் அருகே இந்து முன்னணி அமைப்பினர் சார்பில் நேற்று நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட செயலாளர் செல்வம் தலைமை வகிக்க, செயற்குழு உறுப்பினர் மொக்கராசு முன்னிலை வகித்தனர். விழாவில் நேதாஜியின் படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் ஒன்றிய தலைவர் கண்ணன், நகர செயலாளர் பால்பாண்டி, ஒன்றிய செயலாளர் ஈஸ்வரன், இளைஞரணி அமைப்பாளர் மனோஜ் குமார், நகர தலைவர் பகவதி ராஜ்குமார், நகர செயற்குழு உறுப்பினர் நாகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags : Netaji ,
× RELATED மதுரை நேதாஜி சாலையில் உள்துறை...