சிங்கம்புணரியில் நாளை உழவர் சந்தை

சிங்கம்புணரி, ஜன.24:  சிங்கம்புணரி நகரில் கடந்த 2009ம் ஆண்டு திமுக ஆட்சியில் உழவர் சந்தை கட்டுவதற்கு பணிகள் தொடங்கியது. 20 கடைகள், அலுவலகம், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட பணிகள் முடிவடைந்து பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் உழவர் சந்தை திறக்கப்படாமல் இருந்தது. இதுகுறித்து  சில வாரங்களுக்கு முன்பு மக்கள் குரல் பகுதியில் செய்தி வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் உழவர் சந்தை திறக்க நடவடிக்கை எடுத்தனர்.

அதன்படி நாளை திண்டுக்கல் சாலையில் உள்ள உழவர் சந்தை திறக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் சிங்கம்புணரி, எஸ்.புதூர் வட்டார காய்கறிகள் விவசாயம் செய்யும் விவசாயிகள் உழவர் சந்தை கடையில் பயன்பெற விவசாயிகள் தங்களது ஆதார், அடங்கல் உள்ளிட்ட ஆவணங்கள் வழங்கி அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளலாம்.

Related Stories:

>