அடிக்கல் நாட்டு விழா

ஆர்.எஸ்.மங்கலம், ஜன.24:  ஆர்.எஸ்.மங்கலம் அருகே இருதயபுரத்தில் மிகவும் பழமை வாய்ந்த திருஇருதய ஆண்டவர் திருத்தலம் அமைந்துள்ளது. இந்த திருத்தலத்தின் கட்டிடம் சேதமடைந்ததை தொடர்ந்து அகற்றப்பட்டு, புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதை முன்னிட்டு திருத்தலத்தின் வளாகத்தில், சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்தவர்கள் 500க்கும் மேற்பட்ட பானைகளில் பொங்கல் வைத்து  வழிபாடு செய்தனர். பங்கு பாதிரியார் ஜெமாலை சுரேஸ் தலைமையில், திருப்பலி நடைபெற்றது. திருப்பலி நிறைவேற்றப்பட்ட பின்பு புதிய திருத்தலத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் பாதிரியார்கள் அமல்ராஜ், சகாயராஜ், கிருஸ்டோபர்,  லுார்து, சவரிமுத்து, பர்னபாஸ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

Related Stories:

>