சமத்துவ பொங்கல் விழா

கமுதி, ஜன: 24:    கமுதி அருகே பேரையூர் ஊராட்சி மன்றம் மற்றும் சிவகங்கை பல்நோக்கு சமூக சேவா சங்கம் இணைந்து சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினர். விழாவில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. மேலும் பேரையூர் மற்றும் மேட்டுப்பட்டி ஆகிய இடங்களில் ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன. பின்னர் கலை நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது. சேவா சங்கத்தின் இயக்குனர்  பிரிட்டோ ஜெயபாலன் தலைமை தாங்கினார். பேரையூர் ஊராட்சி தலைவி ரூபி முன்னிலை வகித்தார். உதவித் தலைவர் முகமது சுலைமான், அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி, சமூக சேவா சங்கத்தின் ராமநாதபுரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியராஜ், சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கஸ்பாசேவியர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>