தஞ்சாவூர், ஜன.3: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிராம ஊராட்சி செயலாளர்களுக்கான ஆய்வு கூட்டம் பாபநாசம் கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தராஜ் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும் குடிநீர் , பொது சுகாதாரம், தெருவிளக்குகள், பிரதமர் வீடு கட்டும் திட்டம், தனிநபர் கழிவறை, வரி, வருவாய் இணங்கள் ஆகியவவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கூட்டத்தில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள், கிராம ஊராட்சி செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
