லாரி உரிமையாளரிடம் செல்போன் வழிப்பறி

வாடிப்பட்டி, ஜன. 24: மதுரை பழைய விளாங்குடியைச் சேர்ந்த ராமச்சந்திரன் (37), லாரி உரிமையாளர். இவர், நேற்று அதிகாலை சமயநல்லூர் ரயில்வே பாலம் அடியில் சென்று கொண்டிருந்தார். அப்போது 2 டூவீலர்களில் வந்த சிலர், ராமச்சந்திரனை வழிமறித்து, அவரிடமிருந்த செல்போனை கேட்டுள்ளார். அவர் தரமறுக்கவே ஆத்திரமடைந்த வழிப்பறிக் கும்பல், அவரை கத்தியால் சரமாரி குத்திவிட்டு, செல்போனை வழிப்பறி செய்துவிட்டு தப்பினர்.

இது தொடர்பாக ராமச்சந்திரன் கொடுத்த புகாரின்பேரில், வழக்குப்பதிவு செய்த சமயநல்லூர் போலீசார் நடத்திய விசாரணையில், வழிப்பறியில் ஈடுபட்டது துவரிமான் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜன் மகன் சூர்யா, அவரது நண்பர்களான மதுரை முடக்குச்சாலையைச் சேர்ந்த குமார் மகன் கரேஷ், பழனிக்குமார் மகன் கார்த்திக் உள்ளிட்ட மற்றும் சிலர் என்பது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து சமயநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் வழிப்பறிக் கும்பலை வலைவீசித் தேடி வருகின்றனர்.

Related Stories:

>