பொங்கல் தொகுப்பு கலெக்டர் அறிக்கை

மதுரை, ஜன. 24: கலெக்டர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு பெற்ற 53 வகை கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பொங்கல் தொகுப்பாக வேட்டி, துண்டு, பெண் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு சேலை வழங்கப்பட்டு வருகிறது. ஜன.10ல் தொடங்கி இப்பணி நடந்து வரும் நிலையில், இதுவரை பொங்கல் தொகுப்பு பெறாதவர்கள் இனிமேல், மதுரை புதூர் தாமரைத் தொட்டி பஸ்நிறுத்தம் அருகில் உள்ள ஒருங்கிணைந்த தொழிலாளர்துறை கட்டிட வளாகத்திற்கு வந்து பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>