சின்னாளபட்டியில் வீட்டு கூரையில் இருந்த 2 உடும்புகள் மீட்பு

சின்னாளபட்டி, ஜன. 24: திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி அருகே அஞ்சுகம் காலனியில் நேற்று முன்தினம் மாலை ஒரு வீட்டின் மேற்கூரையில் சிக்கிய நிலையில் 2 உடும்புக்குட்டிகள் உயிருக்கு போராடி வருவதாக ஆத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நிலைய அலுவலர் (பொ) புனிதராஜ் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அங்கு கூரையில் சிக்கி கிடந்த 2 உடும்பு குட்டிகளை மீட்டு, சிறுமலை வனச்சரகரிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் அந்த உடும்பு குட்டிகளை சிறுமலை வனப்பகுதியில் பாதுகாப்பாக விடுவித்தனர்.

Related Stories:

>