- உதவும் கரங்கள் காஞ்சம்புரம்
- Nithiravilai
- ஜெயன்
- துணை ஜனாதிபதி
- மகேஷ்
- பொருளாளர்
- சஜின்
- செல்லத்துரை
- விஜு
- டெசெல்பின்
நித்திரவிளை, ஜன.3: உதவும் கரங்கள் காஞ்சாம்புறம் அமைப்பின் 2வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. விழாவில் அமைப்பின் தலைவர் ஜெயன் தலைமை வகித்து கொடியேற்றினார். துணைத் தலைவர் மகேஷ், பொருளாளர் சஜின், செயற்குழு உறுப்பினர்கள் செல்லத்துரை, விஜு, டெசல்பின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உறுப்பினர் ராஜா வரவேற்றார். நித்திரவிளை எஸ்ஐ ராஜா ராபர்ட் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். அமைப்பின் செயலர் சுகன்யா அறிக்கை வாசித்தார். காஞ்சாம்புறம் பங்கு தந்தை சேவியர் சுந்தர், முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் செல்லசுவாமி, செயற்குழு உறுப்பினர்கள் அப்துல் ரகுமான், குமாரி ஆகியோர் வாழ்த்தி பேசினர். விழாவில் 7 நபர்களுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் கல்வி உதவித்தொகையும், 100 நபர்களுக்கு ரூ.1000 மதிப்பில் நல உதவிகளும் வழங்கப்பட்டன. துணைச் செயலாளர் ததேயூஸ் ராஜு நன்றி கூறினார்.
