மல்லசமுத்திரம், ஜன.3: சேலம்- நாமக்கல் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற காளிப்பட்டி கந்தசாமி கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூச விழா வெகு விமரிசையாக நடப்பது வழக்கம். அதன்படி, நடப்பாண்டு வரும் 28ம் தேதி கொடியேற்றப்பட்டு, பிப்., 1ம் தேதி தேர்த்திருவிழா நடைபெற உள்ளது. இதனையொட்டி, நேற்று பரம்பரை அறங்காவலர் செல்வகுமார் தலைமையில் முகூர்த்தகால் நடப்பட்டு, தேருக்கு மாலை அணிவித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவையொட்டி தற்காலிக கடைகள் அமைக்கும் பணிகளும் நடந்து வருகிறது.
