×

திருச்செங்கோடு அருகே விளை நிலங்களில் சாக்கடை கழிவுநீர்-ஆர்டிஓ நேரில் ஆய்வு

திருச்செங்கோடு :  திருச்செங்கோடு நகராட்சி பகுதியில் இருந்து வெளியேறும் சாக்கடை கழிவுநீர், கொல்லப்பட்டி பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் தேங்கி வருவதாக விவசாயிகள் குற்றச்சாட்டினர். கழிவுநீர் தேங்குவதால் விளை நிலங்கள் பாழாகி வருவதாக புகார் தெரிவித்தனர். இதன்பேரில், திருச்செங்கோடு ஆர்டிஓ இளவரசி, விளை நிலங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அங்கு திரண்ட விவசாயிகள், கழிவுநீர் தேங்கி வருவதர்ல விளை நிலங்கள் பாதிக்கப்படுவதை எடுத்துக்கூறினர். நகராட்சியால் கொட்டி வைக்கப்பட்டுள்ள குப்பை கழிவுகள் மற்றும் விளை நிலங்களுக்குள் திருப்பி விடப்பட்டுள்ள சாக்கடை கழிவுநீர் ஆகியவற்றை பார்வையிட்ட ஆர்டிஓ, கழிவுநீர் முறையாக வெளியேற உரிய வழித்தடங்களை வரைபடம் மூலம் கொடுக்கும்படி, நகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.ஆய்வின்போது தாசில்தார் கண்ணன், ஆர்ஐ பாலசுப்ரமணியம், விஏஓ வீரமணி, நகராட்சி ஆணையாளர்(பொ) சண்முகம், உதவி பொறியாளர் கண்ணன், நகரமைப்பு அலுவலர் குணசேகரன், சுகாதார அலுவலர் சீனிவாசன் மற்றும் ஜான்ராஜா, மேஸ்திரி சாரதா, நகர சர்வேயர் சண்முகசுந்தரம் ஆகியோர் உடனிருந்தனர்….

The post திருச்செங்கோடு அருகே விளை நிலங்களில் சாக்கடை கழிவுநீர்-ஆர்டிஓ நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Tiruchengode-RTO ,Tiruchengode ,Khilili ,Dinakaran ,
× RELATED பள்ளி அருகே செயல்படும் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு