பயிர் காப்பீடு செய்த அனைவருக்கும்100% இழப்பீட்டு தொகை வழங்கக்கோரி பெருகவாழ்ந்தானில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்

மன்னார்குடி, ஜன. 24: திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியத்திற்குட்பட்ட பெருகவாழ்ந்தான் ஊராட்சி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் சுமார் 8ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்பட்டிருந்தது. அண்மையில் பெய்த பரு வம் தவறிய கனமழையால் அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த சம்பா நெற்பயிர்கள் அனைத்தும் மழைநீரில் மூழ்கி அழுகி விட்டது. இதனால் மகசூல் கடுமையாக குறைந்தது. பெரிய அளவிலான பொருளாதார இழப்பீடு ஏற்பட்டதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். கனமழையால் சேதமடைந்த சம்பா நெற்பயிர்களை அதிகாரிகள் பார்வையிட்டு கள ஆய்வு கூட செய்யவில்லை என விவசாயிகள் குற்றச்சாட்டுகின்றனர். இந்நிலையில், கனமழையால் சேதமடைந்த சம்பா பயிருக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ 35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும், புதிதாக கணக்கெடுப்பு நடத்தி அனைத்து விவசாயிகளுக்கும் 100 சதவீதம் பயிர் காப்பீடு இழப்பீடு தொகை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அனைத்து விதமான விவசாய கடன்களையும் முழுமையாக ரத்து செய்ய வேண்டும்,

வேளாண் இடு பொருட்களுக்கு கூடுதலாக மானியங்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெருவை அண்ணாதுரை, தேவதாஸ், தெய்வமணி, சண்முகவேல் ஆகியோர் தலைமையில் பெருகவாழ் ந்தான் கடை வீதியில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட் டனர். இதுகுறித்து தகவல் அறிந்து கோட்டூர் வட்டார வேளாண் உதவி இயக்குனர் தங்கபாண்டியன், இன்ஸ்பெக்டர் ஹேமலதா மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும் உயரதிகாரிகளின் கவனத் திற்கு கொண்டு சென்று உரிய நடவடிககையை விரைந்து எடுப்பதாக வே ளாண் உதவி இயக்குனர் தங்கபாண்டியன் அளித்த உறுதியை ஏற்று விவசா யிகள் தங்களின் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு கலைந்து சென்ற னர். விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தால் மன்னார்குடி முத்துப்பேட் டை இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories:

>