அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் டெல்டா மாவட்டங்களில் தொடர்மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்குவதில் குளறுபடி

வலங்கைமான், ஜன. 24: டெல்டா மாவட்டங்களின் தற்போது அறுவடை பணி நடைபெறும் நிலையில் பருவம் மாறி பெய்த தொடர் மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்குவதில் குளறுபடி நிலவுவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.. டெல்டா விவசாயிகள் ஒரு சில இடங்களில் குறுவை சாகுபடியை மேற்கொண்டனர் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகாவில் சுமார் 4 ஆயிரம் ஹெக்டேரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. அதனை அடுத்து டெல்டா மாவட்டங்கள் முழுவதும் சம்பா சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்பட்டன.வலங்கைமான் தாலுகாவில் சுமார் 14 ஆயிரத்து 584 ஹெக்டேரில் சம்பா மற்றும் தாளடி ஆகியவை நேரடி விதைப்பு இயந்திர நடவு கை நடவு ஆகிய முறைகளில் சாகுபடி பணிகளை விவசாயிகள் துவங்கினர்.இந்நிலையில் வடமேற்கு பருவமழை வழக்கம் போல் தன்னுடைய கணக்கை துவங்கியது வடமேற்கு பருவமழை யோடு வெப்ப சலனத்தின் காரணமாக வும் மழை பெய்ய தொடங்கியது.

இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் அக்டோபர் நவம்பர் மாதங்களில் நீங்களாக டிசம்பர் மாதத்திலும் வடகிழக்கு பருவமழை மற்றும் வெப்ப சலனத்தின் காரணமாக தொடர்ந்து மழை ஜனவரி மாதத்திலும் பெய்ய தொடங்கியது. பருவம் தவறி பெய்த வரும் தொடர் பெய்து மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மட்டுமல்லாது கதிர் வரும் நிலையில் உள்ள நிற்பவர்களும் சாய தொடங்கின. தற்போது பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக சாய்ந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. கடந்த சில நாட்களாக டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக அறுவடைக்கு மட்டுமல்லாது கதிர் வரும் சூழ்நிலையில் இருந்த நெற்பயிர்கள் சாய்ந்தன இந்நிலையில் தமிழக அரசு விவசாயிகளுக்கு நிவாரணம் அறிவித்து வழங்கி வருகிறது.

இதற்கான கணக்கெடுக்கும் பணி கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் அந்தந்த கிராமத்தில் விவசாயிகளின் சாகுபடி பரப்பளவு கணக்கீடு செய்யப்பட்டு அவர்களுக்கு வங்கி கணக்கு எண் ஆகியவை தரப்பட்டு வேளாண்மைத் துறையின் மூலம் நிவாரணத் தொகை விவசாயிகள் வங்கி கணக்கில் ஏற்றப்பட்டு வருகின்றது.இந்நிலையில் சாகுபடி செய்து வரும் உண்மையான விவசாயிகளுக்கு நிவாரண தொகை வங்கிக் கணக்கில் ஏறவில்லை. மேலும் சில விவசாயி களுக்கு நிவாரண தொகை இதுவரை கிடைக்கவில்லை. இதன் காரணமாக விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் வேளாண்மைத் துறை அலுவலகங்களுக்கு விவசாயிகள் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர்.நிவாரணத்தொகை விடுபட்ட விவசாயிகளுக்கு பிறகு வழங்கப்படும் என வாய்மொழியாக கூறப்பட்டிருக்கிறது . எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண தொகை கிடைப்பது வருவாய்த்துறை மற்றும் வேளாண்மைத் துறை உறுதி செய்ய வேண்டும் என்றும் முறைகேடு மற்றும் கவனக்குறைவாக செயல்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>