விவசாயிகள் குற்றச்சாட்டு 2 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு காவல் ஆய்வாளருக்கு எஸ்பி பாராட்டு பொதக்குடியில் மக்கள் கிராமசபை கூட்டம்

நீடாமங்கலம்,ஜன.24: திருவாரூர் மாவட்டம் திமுக. நீடாமங்கலம்(வடக்கு) ஒன்றியம் மன்னைசட்டமன்றதொகுதி பொதக்குடியில் மக்கள்கிராமசபை கூட்டம் “விடியலைநோக்கி ஸ்டாலினின் குரல்”நிகழ்ச்சி மாவட்ட திமுக செயலாளர். எம்எல்ஏ பூண்டி கலைவாணன் தலைமையில் நடந்தது. மன்னை எம்எல்ஏ டிஆர்பி.ராஜா, நீடாமங்கலம் ஒன்றிய குழுதலைவர் செந்தமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய பொறுப்பாளர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். முன்னாள் மத்திய அமைச்சரும், சென்னை மத்திய தொகுதி எம்பியுமான தயாநிதிமாறன் கலந்து கொண்டு மக்கள் குறைகளை கேட்டறிந்தார். திரளான இஸ்லாமிய பெண்கள் உள்ளிட்ட பெண்கள், ஜமாத்தார் கலந்து கொண்டு குறைகளை கூறினர்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு, முன்னாள் எம்எல்ஏ ராஜமாணிக்கம், ஒன்றிய முன்னாள் செயலாளர் அண்ணாதுரை, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கானூர் ஆனந்து, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ராணிசேகர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ராணிசுந்தர், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ராஜலட்சுமி கார்த்திகேயன், ஜெனிதா வேல்முருகன், ஊராட்சி தலைவர்கள் பொதக்குடி மல்லிகா பிச்சையன், அதங்குடி வெங்கடேசன், ஆய்குடி கவுத ரவி,உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலாளர் ஜெயனுலாபுதீன் நன்றி கூறினார்.

Related Stories:

>