வாகனஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வழங்கல்

திருவாரூர், ஜன.24: 32வது சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு திருவாரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில் சாலை பாதுகாப்பு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்பட்டன. தமிழகத்தில் சாலைவிபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் சேதங்களை குறைத்து சாலைபாதுகாப்பை மேம்படுத்தி விபத்தில்லா தமிழகத்தை உருவாக்கிட போக்குவரத்து துறை சார்பில் வருடந்தோறும் அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் ஜனவரி மாதத்தில் சாலை விழிப்புணர்வு வாரம் நடத்தப்படும்.அந்த வகையில் இந்த வருடம் 32வது சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு ஒரு மாதம் முழுவதும் நடத்த மத்திய அரசு அறிவித்துள்ளது.அதன்படி கடந்த 18ம்தேதி முதல் விழிப்புணர்வு முகாம்,கலைநிகழ்ச்சிகள்,மகளிர் சுய உதவிக்குழு மகளிர் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி,உறுதிமொழி ஏற்பு போன்ற நிகழ்ச்சிகள் நடைப்பெற்றன. இந்நிலையில் 6ம்நாளான நேற்று திருவாரூர் வட்டார போக்குவரத்து சார்பில் தாலுகா உதவி காவல் ஆய்வாளர் பாரதநேரு தலைமையில் இருசக்கர,நான்குசக்கர வாகன ஓட்டிக்கள்,கனரக வாகனம் மற்றும் அரசு பேரூந்து ஒட்நர்களுக்கு திருவாரூர் நாகை எல்லையான ஆண்டிப்பாளையத்தில் சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சண்முகவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>