வடுவூரில் சாலை பாதுகாப்பு வார விழா

மன்னார்குடி, ஜன. 24: வடுவூர் காவல் நிலையம் சார்பில் வடுவூரில் சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடப் பட்டது. இதன் ஒரு பகுதியாக ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடைத்தப் பட்டது. பேரணியை இன்ஸ்பெக்டர் பசுபதி கொடியசைத்து துவக்கி வைத்தார்.பேரணி ஏரி கரையில் இருந்து துவங்கி கடை வீதி ,தேரடி வழியாக வடுவூர் புதுக்கோட்டை வரை சென்றது. இறுதியில் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஹெல்மெட் அவசியம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Related Stories:

>