விழிப்புணர்வு பேரணி

 திருத்துறைப்பூண்டி, ஜன. 24: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு நடைபெற்ற ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணியை டிஎஸ்பி பழனிச்சாமி கொடியசைத்து துவக்கி வைத்தார். திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கிய இப்பேரணி பழைய பேருந்து நிலையம், தபால் நிலையம் மற்றும் முக்கிய வீதிகள் வழியாக சென்று காவல் நிலையத்தில் முடிவடைந்தது. இருசக்கர வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து வலியுறுத்தும் விதமாக இப் பேரணி நடைபெற்றது.

Related Stories:

>