கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் தன்னார்வலர்களுக்கு நீர் மேலாண்மை பயிற்சி முகாம்

கறம்பக்குடி, ஜன. 24: கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் தன்னார்வலர்களுக்கு நீர் மேலாண்மை பயிற்சி முகாம் நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 39 ஊராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலர்கள் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு பிரதிநிதிகள் மற்றும் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் விவசாய பிரதிநிதிகள் தன்னார்வலர்களுக்கான நீர் மேலாண்மை பயிற்சி முகாம், ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடந்தது. நீர்வள வேளாண்மை பயிற்சி முகாமுக்கு ஒன்றிய ஆணையர் ரவி தலைமை வகித்தார் வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சிகள் காமராஜ் முன்னிலை வகித்தார். நேற்று மூன்றாம் கட்டமாக ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மாங்கோட்டை, எம் தெற்குத்தெரு, மருதன்கோன்விடுதி, மழையூர், வலன்கொண்டான் விடுதி ஆகிய ஊராட்சிகளில் இருந்த வந்த தன்னார்வலர்களுக்கு வரும் காலங்களில் நீரின் அவசியம், நீரை எவ்வாறு சேமித்து வைத்து கொள்வது, மழைநீர் சேகரிப்பு பற்றிய பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி முகாமில் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய நிர்வாக மேலாளர் மதியழகன், மாங்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பிரேமா மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர். பயிற்சி முகாமில் மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்ட நீர்வள மேலாண்மை முதன்மை பயிற்சியாளர்களான பெரிய சூரிய மாலா, தமிழ்ச்செல்வி ஆகியோர் நீர் மேலாண்மை குறித்து பயிற்சி முகாமில் விளக்கி பேசினர்.

Related Stories:

>