×

தனிப்படை போலீசை வெட்டிய வாலிபர் நீதிமன்றத்தில் சரண் மற்றொருவர் கைது: ஒருவருக்கு வலை

திருச்சி, ஜன. 24: திருச்சி சங்கிலியாண்டபுரம் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் விஜய் (23). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதால் பாலக்கரை போலீசார் மற்றும் தனிப்படையினர் தேடி வந்தனர். கடந்த 21ம் தேதி இரவு தனிப்படை காவலர் வேல் (எ) வேல்முருகன் (32) சங்கிலியாண்டபுரத்தில் இருந்து கிராப்பட்டியில் உள்ள வீட்டிற்கு பைக்கில் சென்றபோது பிளவர் மில் அருகே முன்னால் மொபட்டில் விஜய், இவரது நண்பர் மணப்பாறையை சேர்ந்த யுவராஜ் (21), சங்கிலியாண்டபுரம் அண்ணா நகரை சேர்ந்த ஜெயபாண்டியன் ஆகிய மூவரும் சென்றனர். உள்பட 3 பேர் பைக்கில் சென்றனர்.

மடக்கி பிடிப்பதற்காக காவலர் வேல் வேகமாக சென்று விஜய்யை மறித்து நின்றார். அப்போது உடனிருந்த நண்பர் யுவராஜ் மறைத்து வைத்திருந்த கத்தியால் காவலரின் தலையில் வெட்டிவிட்டு 3 பேரும் தப்பினர். தலையில் ரத்தக் காயமடைந்த காவலர் அங்கிருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து பொன்மலை போலீசார் கொலைமுயற்சி உள்பட 2 பிரிவின் கீழ் வழக்குபதிந்து தேடி வந்தனர். இதில் நேற்று யுவராஜ், ஜேஎம் 2 நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டதை அடுத்து சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் ஜெயபாண்டியனை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். தலைமறைவாக உள்ள விஜய்யை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட ஜெயபாண்டியன் ஒரு பைப் நிறுவனத்தில் வேலை முடிந்து நடந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அவரை பார்த்த விஜய், வலுக்கட்டாயமாக தனது வண்டியில் ஏற்றிச்சென்றபோது சம்பவத்தில் சிக்கி கைது செய்யப்பட்டார்.

காலி பாட்டில்களை மறுசுழற்சி செய்ய வேண்டும்
காலி மதுபாட்டில்களை மறு சுழற்சி செய்ய அரசு முன்வர வேண்டும். தற்போதுள்ள மக்கள் அதிகம் பயன்படுத்தும் பொருட்களில் கண்ணாடி பாட்டில்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் கண்ணாடி பொருட்கள் 100 சதவீதம் மறுசுழற்சி செய்யக்கூடியது. அப்படி இருக்கையில் தமிழக அரசின் கீழ் இயங்கும் டாஸ்மாக் கடைகளில் காலியாக குவிந்து கிடக்கும் மதுபாட்டில்களை உடனுக்குடன் மறு சுழற்சி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். டாஸ்மாக் கடை வளாகத்தை விட்டு மது பாட்டில்களை வெளியில் எடுத்து செல்ல அனுமதிக்க கூடாது என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : Charan ,youth court ,
× RELATED புஷ்பா சுகுமார் இயக்கத்தில் ராம் சரண்