×

அதிமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்

பொன்னமராவதி, ஜன. 24: தமிழகத்தில் 10 ஆண்டுகால அதிமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென பொன்னமராவதியில் நடந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேசினார். பொன்னமராவதியில் வட்டார நகர காங்கிரஸ் பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. வட்டார தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். நகர தலைவர் பழனியப்பன் முன்னிலை வகித்தார். முன்னாள் எம்எல்ஏக்கள் ராம.சுப்புராம், புஷ்பராஜ் ஆகியோர் பேசினர். இதில் பங்கேற்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது: சட்டமன்ற தேர்தல் கலைகட்டி விட்டது. கோவிட் தடுப்பூசியை தைரியமாக போட வேண்டும். எந்தவித தயக்கமின்றி இந்த ஊசியை போடலாம். 2 மாதத்துக்கு முககவசம் அணிய வேண்டும். 50 ஆண்டு அரசியலில் கூட்டணி தான் பலம். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்த கட்சிகளே ஆட்சியை பிடித்துள்ளது என்பது தமிழக வரலாறு.ஆள்பலம், அதிகார பலம், பண பலம் வைத்து செயல்படுவர்கள் நிச்சயம் தோல்வியடைவார்கள். எதிர்காலத்தை ஆழப்போவது திமுக என்பதில் ஐயமில்லை. திமுக தலைமையில் ஆட்சி அமையும் என்ற உறுதியான நம்பிக்கை உள்ளது. 10 ஆண்டு கால அதிமுக ஆட்சிக்கும், 7 ஆண்டு முடிந்து இன்னும் 3ஆண்டுகளில் நடைபெறவுள்ள பாஜக ஆட்சிக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சியில் இருப்பதால் கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்களாக கலெக்டர்கள் மாறிவிட்டனர். மோடிக்கு பயந்து தமிழகத்தில் முதல்வர் ஆட்சி செய்கிறார். காங்கிரஸ் இல்லாத பாரதம் என பேசும் பாஜக. காங்கிரஸ் இல்லாத இந்தியாவை நீங்கள் நினைத்து பார்க்க முடியாது. விவசாயிகளின் எதிரியாக செயல்படும் மோடியை மோதி பார்ப்போம். இந்தி திணிக்கும் பாஜக, தமிழ்மொழிக்கு நேர் எதிரி என்றார். கூட்டத்தில் மாவட்ட தலைவர் தர்மதங்கவேல், பொதுக்குழு உறுப்பினர் ஜீவானந்தம், மாவட்ட துணைத்தலைவர் ராஜேந்திரன், நிர்வாகிகள் சோலையப்பன், கிரிதரன், மணி, ராஜேந்திரன்,சுப்பையா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : AIADMK ,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...